தேசிய ரீதியில் சாதனை படைத்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் மகளிர் அணி.!
அகில இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடாத்திய கால்பந்து போட்டியில் தேசிய மட்டத்தில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மகளிர் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
தேசிய ரீதியில் நடைபெற்ற பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில் யூனியன் கல்லூரி 16 வயது மகளிர் அணி அபார வெற்றி பெற்று தேசிய மட்டத்தில் சம்பியன் பட்டத்தைத் தனதாக்கியுள்ளது.
அரை இறுதிப் போட்டியில் பல தடவைகள் தேசிய சம்பியனாகத் திகழ்ந்த மகாஜனக் கல்லூரி அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் மல்லியதேவ கல்லூரி அணியை எதிர்கொண்டு இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
யூனியன் கல்லூரியின் பெருமையை தேசிய மட்டத்தில் உயர்த்திய வீராங்கனைகளுக்கும், கல்லூரி அதிபர், பொறுப்பாசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்களுக்கும், உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.








