உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட E/25 புதிய மாணவர்களுக்கான கல்விச் செயற்பாடுகள் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
88 பார்வைகள்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட E/25 மாணவர் தொகுதியினருக்கான கல்விச் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (10.11.2026) பொறியியல் பீடத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம உரையாற்றிய பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பொறியியல் கல்வியில் சிறந்து விளங்க விரும்பும் மாணவர்கள் தங்களது கல்விப் பயணத்தின் முதல் நாளிலிருந்தே முறையான திட்டமிடலுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 2,300 மாணவர்கள் மாத்திரமே உயர்பீடப் பொறியியல் கல்விக்காகத் தெரிவு செய்யப்படுகின்ற நிலையில், அவர்களில் ஒரு தொகுதியினராகத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை மாணவர்களுக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பாகும். இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி உயர்ந்த கல்வி அடைவுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

பல்கலைக்கழக வாழ்க்கையின் ஆரம்பத்தில் புதிய கற்றல் மற்றும் சமூகச் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக்கொள்வதில் மாணவர்கள் தயக்கத்தையும் பதற்றத்தையும் எதிர்கொள்வது இயல்பானது எனக் குறிப்பிட்ட உபவேந்தர், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மூலம் அவற்றை வெற்றிகரமாகக் கடக்க முடியும் எனத் தெரிவித்தார்.

மேலும், E/25 மாணவர் தொகுதியில் நாட்டின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளடங்கியிருப்பது பல்கலைக்கழகத்தின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதாகவும், மாணவர்கள் பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து நட்புறவையும் ஒற்றுமையையும் வளர்த்துக்கொண்டு அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பொறியியல் கல்வி வாஷிங்டன் ஒப்பந்தம் (Washington Accord) மற்றும் இலங்கை பொறியியலாளர் நிறுவனம் (IESL) ஆகியவற்றின் சர்வதேசத் தரங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதை விளக்கமளித்த உபவேந்தர், மாணவர்கள் GPA, கிரெடிட் முறைமை மற்றும் பருவகால மதிப்பீடுகள் தொடர்பில் ஆரம்பத்திலிருந்தே தெளிவான புரிதலைப் பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மாணவர்கள் தங்களது கல்விசார் சந்தேகங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித தயக்கமுமின்றி விரிவுரையாளர்களையும் பீடாதிபதியையும் அணுக முடியும் எனவும், பொறியியல் பீடத்தில் எப்போதும் ‘திறந்த கதவுக் கொள்கை’ (Open Door Policy) நடைமுறையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகக் கல்வி என்பது பட்டம் பெறுவதற்கான பயணம் மாத்திரமல்ல; அறிவு, ஆளுமை, தலைமைத்துவம், சமூகப் பொறுப்பு மற்றும் தொழில்முறைத் திறன்களை வளர்த்துக்கொள்ளும் காலகட்டமாகும்.

எனவே, மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளுடன் இணைப்பாடவிதான நடவடிக்கைகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு, எதிர்காலத்தில் திறமையான பொறியியலாளர்களாகவும் பொறுப்புள்ள சமூகப் பிரஜைகளாகவும் உருவாக வேண்டுமென உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பதிவு செய்யப்படாத பெயர்ப்பலகைகள் அகற்றும் நடவடிக்கை.!

மாந்தை மேற்கு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அடம்பன் பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பு காணப்பட்ட பதிவு செய்யப்படாத பெயர்ப்பலகைகளை அகற்றும் நடவடிக்கை இன்றைய தினம்…

67 0 0
இலங்கை செய்திகள்

பொருளாதார விரிவாக்கமும் நீண்டகால மாற்றங்களுமே 2027 பட்ஜட்டின் இலக்கு.!

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை வெறும் நலன்புரிச் சலுகைகள் அல்லது வரிச் சலுகைகளின் அடிப்படையில் மட்டுமே பொதுமக்கள் மதிப்பிடக்கூடாது என்றும், மாறாக அதன் ஒட்டுமொத்த…

75 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட செயலமர்வு.!

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மன்னார் நகரசபை கேட்போர் கூடத்தில் இன்று (11) இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தி, அதில்…

71 0 0
இலங்கை செய்திகள்

செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை.!

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார்…

76 0 0