உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
12 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிச்சைக்காரன் 3 திரைப்படத்திற்கான பணிகள் ஆரம்பம்

சினிமா 1 நாள் முன்
96 பார்வைகள்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக களமிறங்கி இப்போது பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்டு கலக்கி வருகிறார் விஜய் ஆண்டனி .

கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் நூறு சாமி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, படத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது, வசூலிலும் கலக்கியது. அடுத்து விஜய் ஆண்டனி நடிப்பில் அப்பா குட்டி என்ற படம் உருவாகியுள்ளது, இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

விஜய் ஆண்டனி நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றியையும், பெயரையும் பெற்றுத்தந்த திரைப்படம் பிச்சைக்காரன். கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் தமிழ் சினிமாவின் வழக்கமான செண்டிமெண்ட்களை உடைத்தெறிந்து வெற்றி கண்டிருந்தது.

சசி அவர்களின் இயக்கம், விஜய் ஆண்டனி நடிப்பு மற்றும் திரைக்கதை போன்றவற்றால் ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள். தமிழில் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து பிச்சைக்காரன் படம் தெலுங்கிலும் வெளியாகி மாஸ் வெற்றிக் கண்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு பிச்சைக்காரன் 2 ஆம் பாகம் வெளியானது. இப்படத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடிக்க, அவரது மனைவி தயாரித்திருந்தார். முதல் பாகம் அளவில் இல்லையென்றாலும் இரண்டாம் பாகமும் வெற்றிக் கண்டது.

முதல் இரண்டு பாகங்கள் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து பிச்சைக்காரன் படத்தின் 3 ஆம் பாகம் குறித்து தகவல் வந்துள்ளது. இந்த மூன்றாம் பாகத்தை மெட்ரோ, கோடியில் ஒருவன் படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் தான் இயக்க உள்ளாராம்.

விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் இந்த 3 ஆம் பாகத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம். படத்தை அடுத்த வருடம் 2027 ஆயுத பூஜை ஸ்பெஷலாக படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

திருமணம் முடிந்த கையோடு அனிருத் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு!

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை கிரீஸ் நாட்டில் திருமணம் செய்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.…

92 0 0
சினிமா

வைரலாகி வரும் ஜோனிடா காந்தியின் இன்ஸ்டாகிராம் பதிவு!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், பிரபல பின்னணிப் பாடகி ஜோனிடா காந்தி (Jonita…

86 0 0
சினிமா

அனிருத் காவியா மாறன் திருமணத்தில் குத்தாட்டம் போட்ட ரஜினி 

பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் கிரீஸ் நாட்டில்…

96 0 0
சினிமா

“நீங்கள் வெட்கப்பட வேண்டும்”: சீதையின் காட்சிகளை விமர்சித்த முகேஷ் கண்ணா!

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த நவம்பர் 5 ஆம் திகதி…

88 0 0