உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாகிஸ்தானின் பிரபல செய்தி வாசிப்பாளர் ராபியா அசன் சுட்டுக் கொ@லை!

உலக செய்திகள் 5 மணி நேரம் முன்
91 பார்வைகள்

பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி நகரில் பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரான ராபியா அசன் தனது வீட்டில் மர்மமான முறையில் சுடப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவரது கணவரை பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராவல்பிண்டியின் குல்ஷனாபாத் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் கடந்த 08 ஆம் திகதி பிற்பகலில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

ராபியா அசனின் படுக்கையறையில் இருந்து திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்த்த குடும்பத்தினருக்கு, ராபியா அசன் இரத்த வெள்ளத்தில் படுக்கையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நடக்கும்போது ராபியாவின் தாயாரும் சகோதரியும் வீட்டிற்குள் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, துப்பாக்கி தற்செயலாக வெடித்ததாகவும், தான் வைத்திருந்த துப்பாக்கியில் குண்டு இருப்பது தனக்கு தெரியாது என்றும் ராபியாவின் கணவர் பொலிஸாரிடம் ஆரம்பத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், வீட்டில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக வைத்திருந்த 30 போர் ரகத் துப்பாக்கியை பொலிஸார் பறிமுதல் செய்தனர். உயிரிழந்த ராபியாவின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். ராபியாவின் உடல் உடற்கூறாய்வுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, நாட்டில் பெண்களுக்கும் பணிபுரியும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது கவலை அளிப்பதாகக் கூறி பாகிஸ்தான் நாட்டின் முதன்மைத் தலைவர் ஆசீஃபா பூட்டோ-சார்தாரி இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மேலும், இந்த வழக்கு தொடர்பாக வெளிப்படையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரை பதவி நீக்குவதற்கான முயற்சி தடுத்து நிறுத்தம்!

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பதவி நீக்கத் தீர்மானத்தை முன்னெடுக்கும் முயற்சியை குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகள் சபைத் தலைவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். கடந்த…

83 0 0
உலக செய்திகள்

பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவுக்காகக் காத்திருக்கும் தூக்குக் கயிறு!

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர வேறு சட்டப்பூர்வ வழிகள் எதுவும் இல்லை என அந்த நாட்டு சர்வதேச குற்றவியல்…

94 0 0
உலக செய்திகள்

ஈரான் போர் இராணுவ ரீதியாக முடிவுக்கு வந்துள்ளது: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுக்கு எதிரான போர் “இராணுவ ரீதியாகப் பார்க்கையில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது” என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கள்கிழமை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம்,…

96 0 0
உலக செய்திகள்

பாலஸ்தீனத்தில் போருக்கு மத்தியிலும் குலுக்கல் முறையில் கூட்டுத் திருமணம்!

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியிலும், காசா பகுதியில் 250 பாலஸ்தீன இளைஞர் – யுவதிகளுக்காகப் பிரமாண்டமான கூட்டுத் திருமண நிகழ்வொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  வேலையின்மை,…

24 0 0