உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மர்மமான முறையில் குடும்பஸ்தர் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
128 பார்வைகள்

“வயல் காவலுக்காகச் செல்ல வேண்டும், உணவைக் கட்டி வையுங்கள்” என்று தாயாரிடம் சொல்லிவிட்டு மாலையில் வீட்டை விட்டு வெளியேறிய குடும்பஸ்தர் ஒருவர், மறுநாள் காலையில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சோகச் சம்பவம் அம்பாறை மாவட்டம், பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமாரி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கோமாரி பகுதியைச் சேர்ந்த யோகராசா மதன் (34 வயது) எனும் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

மட்டக்களப்பு – அம்பிளாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கோமாரி பகுதியில் திருமணம் முடித்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்கும் பிள்ளை ஒன்று உள்ளமையுடன், இவரது மனைவி பணி நிமித்தம் வெளிநாடொன்றுக்குச் சென்றுள்ளார்.

மேற்படி நபர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை வேளையில் தனது தாயாரிடம், “வயல் காவலுக்காகச் செல்ல வேண்டும், இரவு உணவைக் கட்டி வையுங்கள்” எனக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். எனினும், அவர் இரவு வேளையில் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரைத் தேடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மறுநாளான நேற்று செவ்வாய்க்கிழமை காலை வேளையில் கோமாரி – கழுகொல்லை எனும் பகுதியில் அவர் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்த பொத்துவில் பொலிஸார் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் எவ்வாறு மரணமடைந்தார் அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் இதுவரை எவ்விதத் தகவல்களும் வெளியாகாத நிலையில், இந்த மரணம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

137 0 0
அம்பாறை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் கடலில் நீராடச் சென்ற இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில்இ ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை…

123 0 0
அம்பாறை செய்திகள்

நிந்தவூரில் ‘ஐஸ்’ போ@தைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது!

நிந்தவூர் கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, 10 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (19) வியாழக்கிழமை அதிகாலை…

148 0 0