உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

100 புதிய நோயாளர் காவுவண்டிகளுக்காக இந்திய அரசுடன் உடன்படிக்கை!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
89 பார்வைகள்

1990 சுகப்படுத்தல் சேவைக்குப் பயன்படுத்துவதற்கு முழுமையான மருத்துவ வசதிகளுடன் கூடிய 100 புதிய நோயாளர் காவுவண்டிகளை விநியோகிப்பதற்கு இயலுமாகும் வகையில் நிதிக்கொடையை வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த நிதிக்கொடையைப் பெற்றுக் கொள்வதற்கு இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்திய அரசின் நிதிக்கொடையைப் பயன்படுத்தி 2016 ஆம் ஆண்டில் 1990 சுகப்படுத்தல் தேசிய அவசர நோயாளர் காவுவண்டிச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள ;ளதுடன், குறித்த சேவை 2018 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதன்மூலம், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 24 மணித்தியாலய இலவச சேவை வழங்கப்படுவதுடன், நாளொன்றுக்கு 1,000 – 1,200 நோயாளர்கள் முதலுதவியளித்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர்.

இந்த நோயாளர் காவுவண்டிகள் ஆண்டொன்றுக்கு 09 மில்லியன் கிலோமீற்றர்கள் பயண ஓட்டத்தில் ஈடுபடுவதால், தற்போதுள்ள நோயாளர் காவுவண்டித் தொகுதியில் 322 வண்டிகள் இயந்திரக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளன.

இலங்கை அரசால் முன்வைக்கப்பட்ட விசேட வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு, 1990 சுகப்படுத்தல் சேவைக்குப் பயன்படுத்துவதற்கு முழுமையான மருத்துவ வசதிகளுடன் கூடிய 100 புதிய நோயாளர் காவுவண்டிகளை விநியோகிப்பதற்கு இயலுமாகும் வகையில் நிதிக்கொடையை வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இயந்திரம் பழுது : நடுக்கடலில் தத்தளித்த இரு யாழ். மீனவர்கள் தமிழக கரையோர காவல் படையால் மீட்பு!

கடற்றொழிலிற்குச் சென்ற இரண்டு மீனவர்கள் அவர்களது படகின் வெளிஇணைப்பு  இயந்திரம் பழுதடைந்த நிலையில் இந்தியா தமிழ்நாடு கடற் பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில்  இந்திய கடலோர  காவல்…

78 0 0
இலங்கை செய்திகள்

இடைத்தரகர்களைத் தவிர்க்கவும் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் எச்சரிக்கை!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திலிருந்து சேவைகளைப் பெற வரும்போது திணைக்கள வளாகத்திற்கு அருகில் இருக்கும் இடைத்தரகர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதைத் தவிர்க்குமாறு அத்திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான…

81 0 0
இலங்கை செய்திகள்

அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி நன்மைகளுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…

80 0 0
இலங்கை செய்திகள்

உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் விருதுப் பரிந்துரையில் ருமேஷ் தரங்கவிற்கு 8ஆவது இடம்!

ஈட்டி எறிதல் போட்டியில் வெளிப்படுத்திய மிகச்சிறந்த திறமை காரணமாக ‘உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் (World Athletics Athlete of the Year) விருதிற்கான பரிந்துரைகளில்…

94 0 0