உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மண்டைதீவு புதைகுழி விவகாரம்; விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
86 பார்வைகள்

1990 களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த வழக்கு இன்று (10.11.2026) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தங்களிடமிருந்த சான்றுகளை நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

எனினும், சம்பவம் இடம்பெற்றதாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் இராணுவ முகாம் இருந்தமைக்கான ஆதாரங்களையும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அப்போது அங்கிருந்த இராணுவ அதிகாரிகளின் விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு இராணுவத்தினரிடம் கோரியிருந்த அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பொலிஸார், விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மேலும் கால அவகாசம் கோரினர்.

இதன்போது, விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள், மேலதிக சாட்சியங்கள் மற்றும் தடயங்களை விரைவாகத் திரட்டி சமர்ப்பிக்க வேண்டுமெனக் கோரினர்.

இதையடுத்து நீதிபதி எதிர்வரும் 2027 ஜனவரி 05 ஆம் திகதிக்கு வழக்கை மீள விசாரணைக்காக ஒத்திவைத்தார்.

இன்றைய விசாரணையில் காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபை உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன், வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் உள்ளிட்டோர் முன்னிலையாகியிருந்தனர்.

குறித்த வழக்கு 2025 செப்டெம்பர் 17ஆம் திகதி முதன்முறையாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொடர்ச்சியாக மேலதிக கால அவகாசம் கோரப்பட்டு வருவதால், நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாத மண்டைதீவு புதைகுழி விவகாரத்தின் விசாரணைகள் மேலும் தாமதமடைவது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இயந்திரம் பழுது : நடுக்கடலில் தத்தளித்த இரு யாழ். மீனவர்கள் தமிழக கரையோர காவல் படையால் மீட்பு!

கடற்றொழிலிற்குச் சென்ற இரண்டு மீனவர்கள் அவர்களது படகின் வெளிஇணைப்பு  இயந்திரம் பழுதடைந்த நிலையில் இந்தியா தமிழ்நாடு கடற் பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில்  இந்திய கடலோர  காவல்…

79 0 0
இலங்கை செய்திகள்

இடைத்தரகர்களைத் தவிர்க்கவும் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் எச்சரிக்கை!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திலிருந்து சேவைகளைப் பெற வரும்போது திணைக்கள வளாகத்திற்கு அருகில் இருக்கும் இடைத்தரகர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதைத் தவிர்க்குமாறு அத்திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான…

82 0 0
இலங்கை செய்திகள்

அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி நன்மைகளுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…

80 0 0
இலங்கை செய்திகள்

உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் விருதுப் பரிந்துரையில் ருமேஷ் தரங்கவிற்கு 8ஆவது இடம்!

ஈட்டி எறிதல் போட்டியில் வெளிப்படுத்திய மிகச்சிறந்த திறமை காரணமாக ‘உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் (World Athletics Athlete of the Year) விருதிற்கான பரிந்துரைகளில்…

95 0 0