உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நயினாதீவு மகா வித்தியாலயத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவு; விசேட நினைவு அஞ்சல் முத்திரை வெளியீடு.!

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
91 பார்வைகள்

நயினாதீவு மகா வித்தியாலயத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நினைவு அஞ்சல் முத்திரை வெளியீட்டு விழா நேற்று(09) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யா/நயினாதீவு மகா வித்தியாலயம், தனது எட்டு தசாப்தகால கல்விப் பயணத்தை இவ் ஆண்டு நிறைவு செய்கின்றது.

இதனைக் கொண்டாடும் வகையிலும், பாடசாலையின் வரலாற்றுச் சிறப்பையும் கல்விப் பணியையும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு எடுத்தியம்பும் வகையிலேயே இந்த விசேட நினைவு அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டது.

பாடசாலை அதிபர் தி. நிதர்சனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் திருமதி கே. நிவேதிகா, முத்திரைப் பணியகத்தின் பணிப்பாளர் லங்கா டி சில்வா, முத்திரைப் பணியகத்தின் சிரேஷ்ட வெளியீட்டு உத்தியோகத்தர் சி.என். முனசிங்க மற்றும் பாடசாலையின் பழைய மாணவரும் கலாநிதியுமான லயன் சரவணபவன் கவிகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

இதன்போது, பாடசாலையின் 80 ஆண்டுகால வரலாற்றை அடையாளப்படுத்தும் நினைவு அஞ்சல் முத்திரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

அத்துடன், பாடசாலையில் கற்று முன்னர் தபாலதிபர்களாகப் பணியாற்றியவர்கள், மற்றும் தற்போது பணியாற்றி வருகின்ற தபால் துறை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கும் விசேட நினைவு முத்திரைகள் வழங்கப்பட்டன.

நயினாதீவு மண்ணின் கல்வி வளர்ச்சியில் முக்கிய இடம்பிடித்துள்ள இப்பாடசாலை, பல தலைமுறைகளாக மாணவர்களுக்குக் கல்வியூட்டி சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் தடம்பதிக்கும் ஆளுமைகளை உருவாக்கியுள்ளது.

அந்த வகையில், 80 ஆண்டுகால கல்விப் பயணத்தை நினைவுகூரும் இந்நினைவு முத்திரை வெளியீடு, பாடசாலையின் வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதுடன், நயினாதீவு மக்களின் கல்விப் பாரம்பரியத்தையும் பெருமையையும் தேசிய அளவில் அடையாளப்படுத்தும் நிகழ்வாக இந்த நிகழ்வு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இயந்திரம் பழுது : நடுக்கடலில் தத்தளித்த இரு யாழ். மீனவர்கள் தமிழக கரையோர காவல் படையால் மீட்பு!

கடற்றொழிலிற்குச் சென்ற இரண்டு மீனவர்கள் அவர்களது படகின் வெளிஇணைப்பு  இயந்திரம் பழுதடைந்த நிலையில் இந்தியா தமிழ்நாடு கடற் பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில்  இந்திய கடலோர  காவல்…

79 0 0
இலங்கை செய்திகள்

இடைத்தரகர்களைத் தவிர்க்கவும் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் எச்சரிக்கை!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திலிருந்து சேவைகளைப் பெற வரும்போது திணைக்கள வளாகத்திற்கு அருகில் இருக்கும் இடைத்தரகர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதைத் தவிர்க்குமாறு அத்திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான…

82 0 0
இலங்கை செய்திகள்

அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி நன்மைகளுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…

80 0 0
இலங்கை செய்திகள்

உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் விருதுப் பரிந்துரையில் ருமேஷ் தரங்கவிற்கு 8ஆவது இடம்!

ஈட்டி எறிதல் போட்டியில் வெளிப்படுத்திய மிகச்சிறந்த திறமை காரணமாக ‘உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் (World Athletics Athlete of the Year) விருதிற்கான பரிந்துரைகளில்…

95 0 0