உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மறைந்த ஆயர், அருட்பணியாளர்கள், துறவியர்களை நினைவுகூர்ந்து சிறப்பு திருப்பலி.!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
98 பார்வைகள்

மன்னார் மறை மாவட்டத்தில் இறை பணியாற்றி, தமது வாழ்வையும் உழைப்பையும் திருஅவையின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்து, இறைவனடி சேர்ந்த ஆயர், அருட்பணியாளர்கள் மற்றும் துறவியர்களை நினைவு கூறும் இரங்கல் சிறப்புத் திருப்பலி, நேற்று (9) திங்கட்கிழமை மாலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில், மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, குருமுதல்வர் வணக்கத்துக்குரிய அருட்பணி கிறிஸ்து நேசரெட்ணம் அடிகளார், மறைமாவட்ட அருட்பணியாளர்கள், மன்னார் மறை மாவட்டத்தில் பணியாற்றிவரும் பல்வேறு துறவற சபைகளைச் சேர்ந்த துறவிகள் மற்றும் பெருந்திரளான இறைமக்கள் ஒன்றிணைந்து பங்கேற்றனர்.

மறைமாவட்டத்தின் ஆன்மீக வளர்ச்சிக்காகவும், இறை மக்களின் நலனுக்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்துச் சேவையாற்றிய மறைந்த ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவியர்களின் இறை பணிகளையும், தியாக வாழ்வையும் நன்றியுடன் நினைவு கூர்ந்து, அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இத்திருப்பலி பக்தி பூர்வமாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

தலைமுறை தலைமுறையாக மன்னார் மறைமாவட்டத்தின் விசுவாச வாழ்வுக்கும், நற்செய்திப் பணிக்கும் அடித்தளமிட்டுச் சென்ற இறை அழைப்பின் சாட்சிகளான இவர்களின் அர்ப்பண வாழ்வு, இன்றைய திருஅவைக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் என்றும் வழிகாட்டியாக அமையும் என்பதை இந்நிகழ்வு மீண்டும் நினைவூட்டியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இயந்திரம் பழுது : நடுக்கடலில் தத்தளித்த இரு யாழ். மீனவர்கள் தமிழக கரையோர காவல் படையால் மீட்பு!

கடற்றொழிலிற்குச் சென்ற இரண்டு மீனவர்கள் அவர்களது படகின் வெளிஇணைப்பு  இயந்திரம் பழுதடைந்த நிலையில் இந்தியா தமிழ்நாடு கடற் பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில்  இந்திய கடலோர  காவல்…

79 0 0
இலங்கை செய்திகள்

இடைத்தரகர்களைத் தவிர்க்கவும் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் எச்சரிக்கை!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திலிருந்து சேவைகளைப் பெற வரும்போது திணைக்கள வளாகத்திற்கு அருகில் இருக்கும் இடைத்தரகர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதைத் தவிர்க்குமாறு அத்திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான…

82 0 0
இலங்கை செய்திகள்

அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி நன்மைகளுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…

80 0 0
இலங்கை செய்திகள்

உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் விருதுப் பரிந்துரையில் ருமேஷ் தரங்கவிற்கு 8ஆவது இடம்!

ஈட்டி எறிதல் போட்டியில் வெளிப்படுத்திய மிகச்சிறந்த திறமை காரணமாக ‘உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் (World Athletics Athlete of the Year) விருதிற்கான பரிந்துரைகளில்…

95 0 0