உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு!

இந்திய செய்திகள் 13 மணி நேரம் முன்
86 பார்வைகள்

புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் மருந்துகளின் விலையை வெகுவாகக் குறைக்கும் வகையில், திருத்தப்பட்ட புதிய அதிகபட்ச சில்லறை விலைகள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் நுகர்வோருக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.3,540.38 கோடி வரை பெருமளவிலான நிதி சேமிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை புற்றுநோய் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ளது.

இந்திய மத்திய மருந்துகள் துறையின் கீழ் இயங்கும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம், சுகாதார சேவைகள் இயக்ககம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் புற்றுநோய் மருந்துகளின் வர்த்தக விளிம்பு விலையை வரம்புபடுத்தியுள்ளது.

இதன்படி, மொத்தம் 121 மருந்துகளின் கீழ் வரும் 1,364 புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைகள் கடந்த திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்தியா முழுவதும் உள்ள 85 முன்னணி மருந்து நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளுக்கான திருத்தப்பட்ட விலைப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளன.

இந்த விலை குறைப்பின் மூலம் கிட்டத்தட்ட 679 மருந்து வகைகளின் விலை 50 சதவீதத்திற்கும் மேலாகக் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சில குறிப்பிட்ட மருந்துகளின் விலைகள் அதிகபட்சமாக 96.45 சதவீதம் வரை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக விலை உயர்ந்த புற்றுநோய் மருந்துகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எளிதில் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்திய அரசாங்கம் அறிவித்துள்ள திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலாக எந்தவொரு மருந்துக்கடையும் அல்லது வைத்தியசாலைக் கடைகளும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள் தாங்கள் வாங்கும் மருந்துகளின் சரியான விலையை அதன் மீது அச்சிடப்பட்டுள்ள புதிய சில்லறை விலை மூலமாகவோ அல்லது ‘பார்மா சஹி தாம்’ மொபைல் செயலி மூலமாகவும், இந்திய தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாகவும் சரிபார்த்துக் கொள்ளலாம்.

ஒருவேளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலித்தால் அல்லது விலை தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால், ‘பார்மா ஜன் சமாதான்’ இணையதளம் மூலமாகவோ அல்லது 1800-111-255 என்ற இலவச உதவி எண்களைத் தொடர்பு கொண்டோ பொதுமக்கள் தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

தமிழ்நாட்டில் 2 நாட்களில் 17 கொ@லைகள் ; சட்டம், ஒழுங்கு குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோருடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் 2 நாட்களில் 17 பேர் கொலை…

96 0 0
இந்திய செய்திகள்

நச்சுப் புகை மூட்டத்தில் சிக்கியுள்ள டெல்லி : வெளியில் செல்ல அச்சப்படும் மக்கள்!

டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) அன்று, நச்சுத்தன்மை வாய்ந்த காற்றைச் சமாளிக்கப் போராடி வருகிறது.  அங்கு காற்றின் தரம் தொடர்ந்து மிகவும் மோசமான (very poor)…

90 0 0
இந்திய செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா முழு ஆதரவு!

ரஷ்யா – உக்ரைன் இடையே நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் சூழலில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி…

89 0 0
இந்திய செய்திகள்

சென்னையில் பட்டாசுக் கழிவுகளை தனியாக சேகரிக்க சிறப்பு ஏற்பாடு

சென்னையில் பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காக தலா 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30,000 பைகள் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம்…

100 0 0