கடல் வழியாக ஆடுகளை கடத்த முயன்றவர்கள் சிக்கினர்.!
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கொண்டு செல்ல முயன்ற 08 ஆடுகளுடன் 2 சந்தேகநபர்கள் புத்தளத்தில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் இலங்கை கடற்படைக் கப்பலான விஜய நிறுவனத்தினால், நேற்று (09.11.2026) புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு அவதானிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகக் கொண்டு செல்லப்பட்ட 8 ஆடுகளுடன், படகில் இருந்த இரண்டு 2 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், டிங்கி படகும் மேலதிக நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


