உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழ்நாட்டில் 2 நாட்களில் 17 கொ@லைகள் ; சட்டம், ஒழுங்கு குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

இந்திய செய்திகள் 15 மணி நேரம் முன்
96 பார்வைகள்

சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோருடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் 2 நாட்களில் 17 பேர் கொலை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி திருநாளில் அசுரர்களின் ஆட்சியை நினைவுபடுத்துகிறதா தவெக அரசு என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்தநிலையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

முதல்-அமைச்சருடனான ஆலோசனையில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாளில் மட்டும் 11 கொலைகள் நடந்துள்ளதை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் வைத்துள்ள நிலையில் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு!

புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் மருந்துகளின் விலையை வெகுவாகக் குறைக்கும் வகையில், திருத்தப்பட்ட புதிய அதிகபட்ச சில்லறை விலைகள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் நுகர்வோருக்கு…

86 0 0
இந்திய செய்திகள்

நச்சுப் புகை மூட்டத்தில் சிக்கியுள்ள டெல்லி : வெளியில் செல்ல அச்சப்படும் மக்கள்!

டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) அன்று, நச்சுத்தன்மை வாய்ந்த காற்றைச் சமாளிக்கப் போராடி வருகிறது.  அங்கு காற்றின் தரம் தொடர்ந்து மிகவும் மோசமான (very poor)…

90 0 0
இந்திய செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா முழு ஆதரவு!

ரஷ்யா – உக்ரைன் இடையே நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் சூழலில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி…

89 0 0
இந்திய செய்திகள்

சென்னையில் பட்டாசுக் கழிவுகளை தனியாக சேகரிக்க சிறப்பு ஏற்பாடு

சென்னையில் பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காக தலா 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30,000 பைகள் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம்…

100 0 0