சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து; இருவர் உ**யிரிழப்பு.!
அநுராதபுரம் – மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 2 பேருந்துகளும் தனியார் பேருந்து ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மிகிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.







