உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உக்ரைன் – ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா முழு ஆதரவு!

இந்திய செய்திகள் 16 மணி நேரம் முன்
89 பார்வைகள்

ரஷ்யா – உக்ரைன் இடையே நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் சூழலில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த உரையாடலின் போது, போரின் தற்போதைய கள நிலவரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் ஜெலன்ஸ்கி விளக்கிப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, போர்ச் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளே சரியான வழி என்பதை இந்தியாவின் நிலையான கொள்கையாக மீண்டும் சுட்டிக்காட்டினார்.

மேலும், அமைதியை மீட்டெடுக்க மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தனது முழுமையான பங்களிப்பை வழங்க எப்போதும் தயாராக இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்த ஆலோசனையின் போது, இந்தியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடினர்.

இதனிடையே, ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான முக்கிய முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு!

புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் உயிர்காக்கும் மருந்துகளின் விலையை வெகுவாகக் குறைக்கும் வகையில், திருத்தப்பட்ட புதிய அதிகபட்ச சில்லறை விலைகள் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் நுகர்வோருக்கு…

86 0 0
இந்திய செய்திகள்

தமிழ்நாட்டில் 2 நாட்களில் 17 கொ@லைகள் ; சட்டம், ஒழுங்கு குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை!

சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோருடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் 2 நாட்களில் 17 பேர் கொலை…

96 0 0
இந்திய செய்திகள்

நச்சுப் புகை மூட்டத்தில் சிக்கியுள்ள டெல்லி : வெளியில் செல்ல அச்சப்படும் மக்கள்!

டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) அன்று, நச்சுத்தன்மை வாய்ந்த காற்றைச் சமாளிக்கப் போராடி வருகிறது.  அங்கு காற்றின் தரம் தொடர்ந்து மிகவும் மோசமான (very poor)…

90 0 0
இந்திய செய்திகள்

சென்னையில் பட்டாசுக் கழிவுகளை தனியாக சேகரிக்க சிறப்பு ஏற்பாடு

சென்னையில் பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்காக தலா 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30,000 பைகள் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம்…

100 0 0