கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிறுவன் உ**யிரிழப்பு.!
மாத்தறை – கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 18 ஏக்கர் பகுதியில் நேற்று (09) திங்கட்கிழமை இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெவிநுவர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த சிறுவன் தலல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவனுக்கும் மற்றொரு குழுவினருக்கும் இடையில் ஏற்கனவே நிலவி வந்த தனிப்பட்ட தகராறு முற்றியதையடுத்து, கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டு இக்கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


