உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
11 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ட்ரோன்கள் இறக்குமதி சர்ச்சை; நளின் பண்டார எம்.பி விளக்கம்.!

இலங்கை செய்திகள் 18 மணி நேரம் முன்
84 பார்வைகள்

பாதுகாப்பு அமைச்சின் உரிய முன்அனுமதியின்றி 39 ட்ரோன்கள் மற்றும் 16 நுண்-ஒலிவாங்கிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களிடம் பேசிய அவர்,
கமரா பொருத்தப்பட்ட ட்ரோன் சாதனங்களை வாடகைக்கு வழங்கும் மற்றும் விற்பனை செய்யும் தனது குடும்பத்துக்குச் சொந்தமான தனியார் வணிக நடவடிக்கைகளுக்காகவே இந்தப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன என்று தெரிவித்தார்.

இந்த வணிகத்தை தனது மகன் ஆரம்பித்து நடத்தி வருகின்றார் என்றும், அவரும் தனது தாயாரும் இந்தக் கணினி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர்களாகச் செயற்பட்டு வருகின்றனர் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

தனது மகனின் நிறுவனம், இந்தச் சாதனங்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றிலிருந்து பெற வேண்டிய அவசியமான அனைத்து உத்தியோகபூர்வ அனுமதிகளையும் பெற்றிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், இந்தச் சாதனங்களுக்காகப் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெறப்பட வேண்டிய இறுதி அனுமதி பெறப்படவில்லை என்பதை அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

அதேவேளை, இந்த உபகரணங்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்பட்டவை என்றோ அல்லது சுங்கக் கட்டுப்பாடு மற்றும் அனுமதிகளின்றி சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டவை என்றோ முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

“நாங்கள் இந்தத் தொழில்நுட்ப உபகரணங்களைச் சுங்க அனுமதி பெறாமல், சட்டவிரோதக் கடத்தல் பொருட்கள் போல நாட்டுக்குள் கொண்டு வந்தோம் எனக் கூறப்படுவது முற்றிலும் தவறான புரிதலாகும்.

சுங்கத் திணைக்களத்தின் முறையான சோதனை நடைமுறைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுகின்றது.

நாங்கள் ஏதேனும் பொருட்களைச் சுங்கப் பரிசோதனையின்றி மறைமுகமாகக் கொண்டு வந்திருந்தால், சுங்க அதிகாரிகள் அவற்றை விமான நிலையத்திலேயே நேரடியாகக் கைப்பற்றியிருப்பார்கள்.” – என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இயந்திரம் பழுது : நடுக்கடலில் தத்தளித்த இரு யாழ். மீனவர்கள் தமிழக கரையோர காவல் படையால் மீட்பு!

கடற்றொழிலிற்குச் சென்ற இரண்டு மீனவர்கள் அவர்களது படகின் வெளிஇணைப்பு  இயந்திரம் பழுதடைந்த நிலையில் இந்தியா தமிழ்நாடு கடற் பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில்  இந்திய கடலோர  காவல்…

80 0 0
இலங்கை செய்திகள்

இடைத்தரகர்களைத் தவிர்க்கவும் – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் எச்சரிக்கை!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திலிருந்து சேவைகளைப் பெற வரும்போது திணைக்கள வளாகத்திற்கு அருகில் இருக்கும் இடைத்தரகர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதைத் தவிர்க்குமாறு அத்திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான…

83 0 0
இலங்கை செய்திகள்

அஸ்வெசும மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிப்பு

அஸ்வெசும நலன்புரி நன்மைகளுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலவகாசம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…

80 0 0
இலங்கை செய்திகள்

உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் விருதுப் பரிந்துரையில் ருமேஷ் தரங்கவிற்கு 8ஆவது இடம்!

ஈட்டி எறிதல் போட்டியில் வெளிப்படுத்திய மிகச்சிறந்த திறமை காரணமாக ‘உலக தடகள ஆண்டின் சிறந்த வீரர் (World Athletics Athlete of the Year) விருதிற்கான பரிந்துரைகளில்…

95 0 0