மூன்று முறை சூரியாவை நிராகரித்த பிரபல நடிகை – அம்பலமான உண்மை
நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படத்தில் நஸ்ரியா நடிக்க சம்மதித்தது தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
குறித்த திரைப்படம் எதிர்வரும் 6ஆம் திகதி தீபாவளி வெளியீடாக உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் விளம்பரப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சூர்யா, நஸ்ரியாவைத் தனது திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்கு நீண்டகாலமாக முயற்சித்ததாகத் தெரிவித்தார்.
இதன்போது, முன்னதாக மூன்று முறை தனது திரைப்படங்களில் நடிக்க நஸ்ரியாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களால் அவர் அவற்றை நிராகரித்ததாகவும் குறிப்பிட்டார்.
எனினும், நான்காவது முறையாக ‘சீன்’ திரைப்படத்தில் நடிக்க நஸ்ரியா சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார்.
மேலும், கதைகளைத் தெரிவு செய்வதில் நஸ்ரியா கொண்டுள்ள தெளிவு மற்றும் உறுதியைப் பாராட்டிய அவர், அவரது இயல்பான நடிப்பையும், சண்டைக் காட்சிகளுக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
நஸ்ரியாவை இயல்பான நடிப்புத் திறன் கொண்ட நட்சத்திரம் எனவும் சூர்யா புகழ்ந்துள்ளார்.


