உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிணை கிடைத்தும் சிறையிலேயே நாமல்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
124 பார்வைகள்

கிரிஷ் நிறுவனத்துடனான சர்ச்சைக்குரிய கொடுக்கல் – வாங்கல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், வேறொரு வழக்கில் பிணை பெறாத காரணத்தால் நாமல் ராஜபக்ஷ தொடர்ந்து விளக்கமறியலிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை, ட்ரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள காணியைப் பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்காகக் கிரிஷ் நிறுவனத்துக்கு மாற்றுவதற்கு வசதியாக 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக நாமல் ராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டப்பட்டு இந்த வழக்கு இடம்பெற்று வருகின்றது.

இந்த வழக்கில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையிலேயே அவருக்குப் பிணை அனுமதிக்கப்பட்டது.

இதேவேளை, எயார்பஸ் விமான ஒப்பந்த வழக்கில் 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிணை கிடைக்காத காரணத்தினாலேயே, நாமல் ராஜபக்ஷ தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

93 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

122 0 0
இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

134 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

129 0 0