உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திருகோணமலை துப்பாக்கிச் சூடு; வெளியான காரணம்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
136 பார்வைகள்

திருகோணமலை – கப்பல்துறைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு முச்சக்கரவண்டி ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த நபர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த கடற்படைச் சிப்பாய் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கப்பல்துறைப் பகுதியில் நேற்று இரவு 9.15 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றை இலக்குவைத்து, ரி – 56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் திருகோணமலை, ஆண்டான்குளம் – பேதிஸ்புர பகுதியைச் சேர்ந்த ரத்ன விபுசன குலதுங்க ஆராய்ச்சிலாகே கயான் மனுசங்க (வயது 39) எனும் குடும்பஸ்தரான கடற்படைச் சிப்பாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அத்துடன், முச்சக்கரவண்டியில் பயணித்த 28 மற்றும் 38 வயதுடைய இருவர் பலத்த காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், போதைப்பொருள் விவகாரம் தொடர்பான தகராறே இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்குப் பிரதான காரணம் எனக் கண்டறிந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

137 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

128 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0