உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு; நாமலுக்கு பிணை.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
120 பார்வைகள்

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷவின் தாயாரும் தந்தையாரும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையினால், அதனை விசேட காரணியாகக் கருதி அவரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் அண்மையில் நீதிமன்றத்தில் பிணைக் கோரிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து குறிப்பிட்டிருந்தனர்.

எனினும், அந்த கோரிக்கைக்கு இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கொழும்பு, டிரான்ஸ்வேர்க் சதுக்கத்திலுள்ள காணியொன்றை இந்திய கிரிஷ் நிறுவனத்திற்கு பன்முகத் திட்டத்திற்காக வழங்குவதற்கான பணிகளைச் செய்து கொடுப்பதற்காக 70 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

119 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

125 0 0
இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

136 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

129 0 0