உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சமையல் எரிவாயு முறைகேடுகள்; முறைப்பாடு செய்ய துரித இலக்கம்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
117 பார்வைகள்

சமையல் எரிவாயுவைக் கொள்வனவு செய்யும்போது இடம்பெறும் பல்வேறு முறைகேடுகள் குறித்து உடனடியாகத் தெரியப்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) பொதுமக்கள் மற்றும் நுகர்வோரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது பிரதேசங்களில் சமையல் எரிவாயுவைக் கொள்வனவு செய்யும் சந்தர்ப்பங்களில் பின்வரும் அநீதிகள் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றால் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிவாயுவை வழங்க மறுத்தல், எரிவாயுவை மறைத்து வைத்தல் (செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்குதல்), விற்பனை செய்ய மறுத்தல், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல் மேற்குறிப்பிடப்பட்ட முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயற்பாடுகள் உங்கள் பிரதேசத்தில் இடம்பெற்றால், உடனடியாக அருகிலுள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபையின் (CAA) மாவட்ட அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துமாறு அல்லது 1977 என்ற நுகர்வோர் முறைப்பாட்டுத் துரித தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்போம்! நியாயமான விலையில் எரிவாயுவைப் பெறுவோம்!” என்ற தொனிப்பொருளில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) மேலும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

120 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

125 0 0
இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

136 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

129 0 0