உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பல்லவராய மன்னனின் உருவச்சிலைக்கு சிறீதரன் மரியாதை.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
124 பார்வைகள்

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பில் சுயாட்சியுடைய நகரங்களையும் இராணுவக் கட்டமைப்புகளையும் நிறுவி ஆட்சி செய்த சிற்றரசர்களுள் வீரத்தின் அடையாளமாக விளங்கும் பல்லவராய மன்னனின் உருவச்சிலைக்கு, நேற்று திங்கட்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன்போது, ஸ்ரீலங்கா வான் படையின் குண்டுவீச்சுக்கு இலக்காகி வீரச்சாவதைத் தழுவிக்கொண்ட தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 19ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அகவணக்கம் செலுத்தி நினைவுகூரப்பட்டது.

பூநகரி பிரதேச சபையின் பல்லவராயன்கட்டு வட்டார உறுப்பினர் பிள்ளையினார் இராசலிங்கம் தலைமையில் பல்லவராய மன்னனின் உருவச்சிலை அமைந்துள்ள பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சிவகுமாரன் சிறீரஞ்சன், பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் சிங்ககுமார் செல்வகுமார், பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்களான சுப்பிரமணியம் சந்திரபோஸ் (ஜெயபுரம் வட்டாரம்), திருமதி தாரிணி ஜனார்த்தனன் (பொன்னாவெளி வட்டாரம்), பூநகரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கேதீஸ்வரன், கட்சியின் பூநகரி பிரதேச வாலிப முன்னணியினர், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

119 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

125 0 0
இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

136 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

129 0 0