உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
30 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து லசித் மலிங்க உள்ளிட்ட மூன்று பயிற்சியாளர்கள் விலகல்!

விளையாட்டுச் செய்திகள் 3 மணி நேரம் முன்
68 பார்வைகள்

2027ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய, முன்னாள் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, பராஸ் மாம்ப்ரே மற்றும் கார்ல் ஹொப்கின்சன் ஆகிய மூவரும் அணியின் பயிற்சியாளர் குழுவிலிருந்து விலகியுள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி இன்று (29) அறிவித்துள்ளது.

மூவரும் அணிக்கு வழங்கிய பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்துள்ள நிர்வாகம், அவர்களின் எதிர்காலப் பணிகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகப் பணியாற்றிய லசித் மலிங்க, 2024ஆம் ஆண்டு மீண்டும் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்தார்.
முன்னதாக, வீரராகவும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

பராஸ் மாம்ப்ரேவும் பந்துவீச்சுப் பயிற்சியாளராகப் பணியாற்றிய நிலையில், கார்ல் ஹொப்கின்சன் களத்தடுப்புப் பயிற்சியாளராகச் செயற்பட்டார்.

இதற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து முன்னாள் இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன விலகியிருந்தார்.

இதையடுத்து, 2027ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐந்து முறை ஐபிஎல் சம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 2026ஆம் ஆண்டு தொடரில் பத்து அணிகளில் ஒன்பதாவது இடத்தைப் பெற்றிருந்தது.

இந்தநிலையில், 2027ஆம் ஆண்டு தொடருக்கான பயிற்சியாளர் குழுவை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை அணி நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது.

விலகியுள்ள மூன்று பயிற்சியாளர்களுக்கான மாற்று நியமனங்கள் தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

பொதுநலவாய கபடி சாம்பியன்ஷிப்; யாழ். வீராங்கனை சிறந்த ‘ரைடர்’ விருது வென்று சாதனை.!

இந்தியாவில் நடைபெற்றுவரும் 2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கபடி சம்பியன்ஷிப் தொடரில், இலங்கை தேசிய அணி சார்பாக பங்கேற்றுத் திறமையை வெளிப்படுத்திவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீராங்கனை விமலேந்திரன்…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ODI முத்தரப்பு தொடர்: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி!

நடைபெற்று வரும் ஒருநாள் சர்வதேச (ODI) முத்தரப்பு தொடரின் போட்டியில் இலங்கை அணியை 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த…

94 0 0
விளையாட்டுச் செய்திகள்

அவுஸ்திரேலிய வீரரிடம் மணல் காகிதத்தைக் காட்டி கேலி செய்த ரசிகர்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனை அந்நாட்டு ரசிகர் ஒருவர் மணல் காகிதத்தைக் காட்டி கேலி…

112 0 0
விளையாட்டுச் செய்திகள்

இந்தியாவுக்காக மூன்றுமுறை தங்கம் வென்றவரின் விபரீத முடிவு!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற இந்திய பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் (42), டெல்லியில் உள்ள தனது குடியிருப்பில்…

87 0 0