ODI முத்தரப்பு தொடர்: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி!
நடைபெற்று வரும் ஒருநாள் சர்வதேச (ODI) முத்தரப்பு தொடரின் போட்டியில் இலங்கை அணியை 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 386 ஓட்டங்களைக் குவித்தது.
இங்கிலாந்து அணி சார்பில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய பென் டக்கெட் 167 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
387 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 45.1 ஓவர்களில் 331 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவன் ரத்நாயக 118 ஓட்டங்களையும், குஷல் மெண்டிஸ் 89 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் லியம் டெவ்சன் 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு வழிவகுத்தார்.


