வர்த்தக நிலையத்தில் திருட்டு; சந்தேகநபர் கைது.!
கடந்த 25 ஆம் திகதி தலவாக்கலை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட்களை திருடிச்சென்ற சந்தேகநபர் தொடர்பில் பல இணையத்தளங்களிலும் தேசிய பத்திரிகைகளிலும் நேற்று செய்தி வெளியிடப்பட்ட 24 மணித்தியாலங்களுக்குள் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை சந்தேகநபர் உடுபூசல்லாவ, வால்டீமார் தோட்டப் பிரிவில் (Waldemar Factory Division) நடமாடிக் கொண்டிருந்தபோது பிரதேசவாசிகளின் அவதானிப்பிற்கு உள்ளாகியுள்ளார்.
அதற்கமைய உடனடியாக செயற்பட்ட பிரதேச முக்கியஸ்தர்களும் இளைஞர்களும் இணைந்து சந்தேகநபரைப் பிடித்து உடுப்புஸ்சல்லாவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


