உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஹோமாகம குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
87 பார்வைகள்

பொலிஸ் காவலில் இருந்தபோது சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை (28) மேற்கு மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹொரனை, பெல்லப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபராவார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 26 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேற்கு மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே, பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாரதிகளை இலக்கு வைத்து போ*தைப்பொருள் பரிசோதனை; மூவர் சிக்கினர்.!

மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இன்று (29) வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை சாரதிகளை இலக்கு வைத்து திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில்…

1 0 0
இலங்கை செய்திகள்

சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை.!

நாட்டினுள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுச் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள, சர்வதேசப் பொலிஸாரால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 112 சந்தேகநபர்கள் 13 நாடுகளில் தங்கியிருப்பது…

73 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் திருட்டு; சந்தேகநபர் கைது.!

கடந்த 25 ஆம் திகதி தலவாக்கலை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட்களை திருடிச்சென்ற சந்தேகநபர் தொடர்பில் பல இணையத்தளங்களிலும் தேசிய பத்திரிகைகளிலும் நேற்று செய்தி…

77 0 0
இலங்கை செய்திகள்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வட சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் நிலவிய வளிமண்டலக் கீழடுக்கில் ஏற்பட்ட சுழற்சி, இன்று (29) முற்பகல் 11.30 அளவில் குறைந்த காற்றழுத்தத்…

80 0 0