உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
90 பார்வைகள்

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

குற்றச் செயலொன்றின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டமை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கடிதத்தை ஒப்படைப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நாவல பகுதியில் அமைந்துள்ள ரகித ராஜபக்ஷவின் வீட்டிற்குச் சென்றுள்ளது.

இருப்பினும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த அறிவித்தலை வழங்கச் சென்ற வேளையில், ரகித ராஜபக்ஷ வீட்டில் இருக்கவில்லை என அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் திருட்டு; சந்தேகநபர் கைது.!

கடந்த 25 ஆம் திகதி தலவாக்கலை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட்களை திருடிச்சென்ற சந்தேகநபர் தொடர்பில் பல இணையத்தளங்களிலும் தேசிய பத்திரிகைகளிலும் நேற்று செய்தி…

71 0 0
இலங்கை செய்திகள்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வட சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் நிலவிய வளிமண்டலக் கீழடுக்கில் ஏற்பட்ட சுழற்சி, இன்று (29) முற்பகல் 11.30 அளவில் குறைந்த காற்றழுத்தத்…

74 0 0
இலங்கை செய்திகள்

சொகுசு பேருந்தின் சாரதி, நடத்துனர் மீது தாக்குதல்; ஆறு பேர் கைது.!

களுத்துறை – கொழும்பு பிரதான வீதியின் நாகஸ் சந்திப் பகுதியில் உந்துருளிகளில் வந்து, சொகுசு பேருந்து ஒன்றை மறித்து அதன் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல்…

52 0 0
இலங்கை செய்திகள்

ஹோமாகம குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

பொலிஸ் காவலில் இருந்தபோது சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி எதிர்வரும் நவம்பர் மாதம் 12…

82 0 0