சொகுசு பேருந்தின் சாரதி, நடத்துனர் மீது தாக்குதல்; ஆறு பேர் கைது.!
களுத்துறை – கொழும்பு பிரதான வீதியின் நாகஸ் சந்திப் பகுதியில் உந்துருளிகளில் வந்து, சொகுசு பேருந்து ஒன்றை மறித்து அதன் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்கள் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாத்துவ மற்றும் மொரந்துடுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் இத்தாக்குதலை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்திய இரண்டு உந்துருளிகளும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், களுத்துறை வடக்கு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


