உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
29 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அவுஸ்திரேலிய வீரரிடம் மணல் காகிதத்தைக் காட்டி கேலி செய்த ரசிகர்!

விளையாட்டுச் செய்திகள் 5 மணி நேரம் முன்
104 பார்வைகள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனை அந்நாட்டு ரசிகர் ஒருவர் மணல் காகிதத்தைக் காட்டி கேலி செய்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3 ஆவது டெஸ்ட் போட்டியின்போது, எல்லைக்கோட்டுக்கு அருகே பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த நாதன் லயனை நோக்கி ரசிகர் ஒருவர் மணல் காகிதத்தை காட்டியதாக தெரிகிறது.

அவுஸ்திரேலிய அணியின் கடந்த கால சர்ச்சையை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்த இந்த ரசிகரின் செயல் தொடர்பான காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இதே நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்போது அவுஸ்திரேலிய வீரர் கேமரூன் பேன்கிராப்ட், பந்தின் தன்மையை மாற்றுவதற்காக மணல் காகிதத்தைப் பயன்படுத்தியது தொலைக்காட்சி கேமராவில் பதிவானது. இந்த சம்பவம் உலக கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை அணி தலைவர் டேவிட் வார்னர் ஆகியோருக்கு 12 மாதங்கள் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. பேன்கிராப்டுக்கு 9 மாதத் தடை விதிக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு பந்தைச் சேதப்படுத்திய சர்ச்சை அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் முக்கியமான சர்ச்சைகளில் ஒன்றாகத் தொடர்ந்து நினைவுகூரப்படுகிறது. தற்போது அதே மைதானத்தில் இரு அணிகளும் மோதும் நிலையில், ரசிகரின் இந்த செயல் பழைய சம்பவத்தை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.

நாதன் லயனை நோக்கி மணல் காகிதத்தை காட்டிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இந்தியாவுக்காக மூன்றுமுறை தங்கம் வென்றவரின் விபரீத முடிவு!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற இந்திய பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் (42), டெல்லியில் உள்ள தனது குடியிருப்பில்…

74 0 0
விளையாட்டுச் செய்திகள்

WPL ஏலத்தில் சாதனை படைத்த 15 வயது வீராங்கனை!

மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் வரலாற்றில், ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட மிக இளம் வயது வீராங்கனை என்ற புதிய சாதனையை கர்நாடகாவைச் சேர்ந்த 15 வயது…

77 0 0
விளையாட்டுச் செய்திகள்

கொமன்வெல்த் கபடி சம்பியன்ஷிப்; இலங்கை பெண்கள் அணியினர் வரலாற்றுச் சாதனை.!

இந்தியாவில் இடம்பெற்றுவரும் கொமன்வெல்த் கபடி சம்பியன்ஷிப் 2026 தொடரில் அபார திறமைகளை வெளிப்படுத்திவரும் இலங்கை பெண்கள் கபடி அணி அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. முதலாவது…

81 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கையின் இளம் கால்பந்து வீரர்களுக்கு சர்வதேச வாய்ப்புகள்!

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் பிஃபா (FIFA) தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோவுக்கும் (Gianni Infantino), விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையிலான இலங்கை உயர்மட்டக் குழுவிற்கும் இடையிலான…

96 0 0