உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கைது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
83 பார்வைகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் லலித் பியூம் பெரேரா, இலஞ்ச, ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடிகள் மற்றும் நிதி ஒழுங்கீனங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அவர் கடமையாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தே ஆணைக்குழுவின் அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரைத் தகுந்த சட்ட நடைமுறைகளுக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலஞ்ச, ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஆபத்தான நிலையில் புங்குடுதீவு வாணர் தாம்போதி கடற்பாலம் – உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை!

யாழ்ப்பாணக் குடாநாட்டையும் தீவகப் பகுதிகளையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்து மார்க்கமான புங்குடுதீவு வாணர் தாம்போதி கடற்பாலம், நிரந்தர புனரமைப்பின்றி இருப்பதுடன், அதன் இரு கரைகளும் பாதுகாப்பு கற்களோ…

88 0 0
இலங்கை செய்திகள்

நிந்தவூரில் கோழி இறைச்சியின் விலையைக் காட்சிப்படுத்துவது கட்டாயம்!

நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின் விலையை நாளை முதல் நுகர்வோருக்குத் தெளிவாகத் தெரியும் வகையில் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என நிந்தவூர்…

70 0 0
இலங்கை செய்திகள்

அட்டாளைச்சேனையில் காட்டு யானைகள் அட்டகாசம்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் அச்சுறுத்தல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை அமைந்துள்ள புறத்தோட்டம் பகுதியில் நேற்றிரவு (27) உட்புகுந்த காட்டு யானைகள், பயன்தரக்கூடிய 20 தென்னை மரங்களை பிடுங்கி அழித்து நாசப்படுத்தியுள்ளதுடன், நெல் களஞ்சிய…

73 0 0
இலங்கை செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக 50 அம்சப் பிரேரணை; விவாதத்தைத் தவிர்க்க அரசு முயற்சி.!

தேசிய மக்கள் சக்தி அரசின் சபாநாயகருக்கு எதிராக, அரச சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் குற்றவியல் ரீதியில் கையாளுதல் உள்ளிட்ட 50 அம்சங்களைக் கொண்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று…

78 0 0