உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சபாநாயகருக்கு எதிராக 50 அம்சப் பிரேரணை; விவாதத்தைத் தவிர்க்க அரசு முயற்சி.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
75 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தி அரசின் சபாநாயகருக்கு எதிராக, அரச சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் குற்றவியல் ரீதியில் கையாளுதல் உள்ளிட்ட 50 அம்சங்களைக் கொண்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று 44 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் எதிர்க்கட்சியால் கையளிக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

எதுல்கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி பிரதான காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஊடக சந்திப்பில் எஸ்.எம். மரிக்கார் எம்.பி. மேலும் தெரிவித்ததாவது,
“சபாநாயகருக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம் உள்ள நிலையில், அரச நிர்வாக அமைச்சுக்குச் சொந்தமான மற்றொரு பல மாடிக் குடியிருப்பை உபயோகித்தல், அங்கு தளபாடங்களை எடுத்துச் செல்லுதல், நாடாளுமன்ற உணவகத்தில் எவ்வித கட்டணமுமின்றி உணவுகளைப் பெற்று நிதி நட்டம் ஏற்படுத்தியமை மற்றும் ஊடகப் பிரிவைத் தனியார் நேர்காணல்களுக்காகச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட 50 பலத்த குற்றச்சாட்டுகள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அடங்கியுள்ளன.

இந்தப் பிரேரணை கையளிக்கப்பட்டவுடன் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஆரம்பத்தில் கூறப்பட்ட போதிலும், தற்போது நீதிமன்ற வழக்கு ஒன்றைக் காரணம் காட்டி அரசு இதனை விவாதத்துக்கு எடுப்பதைத் தவிர்க்கப் பார்க்கின்றது.

நீதிமன்ற மனுத் தாக்கல் செய்யப்பட்ட மாத்திரத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறுவது அடிப்படையற்றது. அத்துடன், நாடாளுமன்றத்தின் இறைமையை மாற்ற எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையினாலும் முடியாது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் இது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாவிட்டால், குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றையும் மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்துவோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி, இன்று அதைவிடவும் கடுமையான அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

நீதிவான் ஒருவரால் கூட பிணை வழங்க முடியாத வகையில் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவில் நபர்களை இரண்டு மாதங்கள் தடுத்து வைக்கவும், பொலிஸ் அதிகாரங்களை முப்படையினருக்கும் கடலோரப் பாதுகாப்புப் படைக்கும் வழங்கவும் இதில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த அடக்குமுறைச் சட்டங்கள் காரணமாக 2027 ஜனவரிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து கிடைக்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இலங்கை இழக்கும் பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் சீர்குலைந்துள்ளதால் வெளிநாட்டு முதலீடுகளோ டொலர்களோ நாட்டுக்குள் வருவதில்லை.

போர்ட் சிட்டி திட்டத்தின் 500 மில்லியன் டொலர் செயற்றிட்டங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றன. டொலர் வருமானம் இழக்கப்பட்டமையினால் எரிவாயு வரிசைகள் உருவாகி, மின்கட்டணம் 50 வீதத்தால் உயர்த்தப்பட்டு, மக்கள் தங்க நகைகளை அடகுவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 5 ஆண்டுகள் கேட்ட தலைவர்கள் நாட்டை 50 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, கடந்த காலத்தில் தடுப்புக் காவலில் இருப்பவர்கள் மரணிப்பது தொடர்பாக ஜனநாயகம் பேசிய தரப்பினர், இன்று ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் மௌனமாகத் தப்பியோடி வருகின்றனர்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அட்டாளைச்சேனையில் காட்டு யானைகள் அட்டகாசம்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் அச்சுறுத்தல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை அமைந்துள்ள புறத்தோட்டம் பகுதியில் நேற்றிரவு (27) உட்புகுந்த காட்டு யானைகள், பயன்தரக்கூடிய 20 தென்னை மரங்களை பிடுங்கி அழித்து நாசப்படுத்தியுள்ளதுடன், நெல் களஞ்சிய…

68 0 0
இலங்கை செய்திகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கைது.!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் லலித் பியூம் பெரேரா, இலஞ்ச, ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.…

81 0 0
இலங்கை செய்திகள்

எதிராளிகளை முடக்கப் பார்க்கும் அநுர அரசு.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அல்லாமல், தமது அரசியல் எதிராளிகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடக்கி வைப்பதற்கே நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று…

81 0 0
இலங்கை செய்திகள்

காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு.!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் பல வருடங்களாக தமது காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த 65 குடும்பங்களுக்கு இன்றையதினம் புதன்கிழமை (28) மன்னார் மாவட்டச்…

85 0 0