உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கோட்டாவுக்கான பயணத்தடை நீக்கம்; சி.ஐ.டிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
92 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து வரும் நவம்பர் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி கருத்துக்களை முன்வைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குக் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி கோரி முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதிவான் வசந்த அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னதாகச் சிங்கப்பூரிலுள்ள வைத்தியசாலையொன்றில் இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருந்த நிலையிலும், அதன் தொடர்ச்சியான மேலதிக மருத்துவ சிகிச்சைகளுக்காக அவர் மீண்டும் சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளமையாலும் அவரது பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் திறந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தார்.

எனினும், இந்த வழக்கின் முறைப்பாட்டாளரான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் இதன்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

இதனையடுத்தே, பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கைக்குத் தமது தரப்புப் பதிலையும் நிலைப்பாட்டையும் முன்வைப்பதற்காக வரும் நவம்பர் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் பணித்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சிலருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அட்டாளைச்சேனையில் காட்டு யானைகள் அட்டகாசம்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் அச்சுறுத்தல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை அமைந்துள்ள புறத்தோட்டம் பகுதியில் நேற்றிரவு (27) உட்புகுந்த காட்டு யானைகள், பயன்தரக்கூடிய 20 தென்னை மரங்களை பிடுங்கி அழித்து நாசப்படுத்தியுள்ளதுடன், நெல் களஞ்சிய…

66 0 0
இலங்கை செய்திகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கைது.!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் லலித் பியூம் பெரேரா, இலஞ்ச, ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.…

80 0 0
இலங்கை செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக 50 அம்சப் பிரேரணை; விவாதத்தைத் தவிர்க்க அரசு முயற்சி.!

தேசிய மக்கள் சக்தி அரசின் சபாநாயகருக்கு எதிராக, அரச சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் குற்றவியல் ரீதியில் கையாளுதல் உள்ளிட்ட 50 அம்சங்களைக் கொண்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று…

74 0 0
இலங்கை செய்திகள்

எதிராளிகளை முடக்கப் பார்க்கும் அநுர அரசு.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அல்லாமல், தமது அரசியல் எதிராளிகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடக்கி வைப்பதற்கே நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று…

80 0 0