உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உள்ளூராட்சி சபைகளில் தமிழரசு – சங்கு ஒரே கட்சியாக இயங்க தீர்மானம்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
80 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய இரு தரப்புகளும் உள்ளூராட்சி சபைகளின் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஒரே கட்சியைப் போல் இணைந்து இயங்குவது எனத் தீர்மானித்துள்ளனர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், அரசால் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள புதிய சட்டமூலங்களுக்கு எதிராக இரு கட்சிகளும் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளன என்றும் அவர் அறிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இந்தச் சந்திப்பில் எங்களது இரண்டு கட்சிகளினதும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இணங்கிச் சேர்ந்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக ஆராய்ந்தோம்.

அதன் பிரதிபலனாக, இரு தரப்பிலுமுள்ள உள்ளூராட்சிச் சபை தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்குத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்குவதெனத் தீர்மானித்துள்ளோம்.

குறிப்பாக, உள்ளூராட்சி சபைகளில் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் விடயங்களில் இரு கட்சிகளும் ஒரே கட்சியைப் போல் இணைந்து இயங்குவதே சிறந்தது என்பதால், அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு இரு தரப்பு உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.” – என்றார்.

அரசின் புதிய சட்டமூலங்கள் குறித்துக் கருத்து வெளியிட்ட அவர்,
“தற்போது அரசால் அறிமுகப்படுத்தப்படும் ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம்’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய சட்டம்’ ஆகியன தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. இந்த இரு சட்டங்களும் ஏற்கனவே உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு மாற்றாகக் கொண்டுவரப்படும் சட்டங்களாகக் காணப்படுகின்றன.

ஆனால், பழைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கூட இல்லாத பல மோசமான மற்றும் ஆபத்தான அம்சங்கள் இந்த இரு புதிய சட்டங்களின் மூலமாகவும் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.” – என்றார்.

புதிய சட்டங்களில் உள்ள பேராபத்துக்களைச் சுட்டிக்காட்டிய அவர்,
“உதாரணமாக, பழைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் பொலிஸாரிடம் வழங்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்கப்பட்டது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. புதிய அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டத்தில் அந்த அம்சம் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் பற்றிய சட்டத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் இருந்த அனைத்து மோசமான விடயங்களும், அதைவிடக் கூடுதல் பேராபத்து விளைவிக்கும் புதிய ஏற்பாடுகளும் இந்த இரண்டு சட்டங்களிலும் கொண்டுவரப்படுகின்றன.

இதற்கு எதிராக இரு கட்சிகளும் இணைந்து வலுவான போராட்டம் ஒன்றை நடத்துவது எனத் தீர்மானித்துள்ளோம். இது குறித்த முழுமையான விவரங்களை எமது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் விரைவில் அறிவிப்போம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செஞ்சிறகுகள் விமானவியல் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விமானவியல் தின விழா.!

கல்வி என்பது மாணவர்களை ஏற்கனவே அறிந்த பாதைகளில் மட்டுமே பயணிக்கச் செய்வதல்ல, அவர்கள் செல்லக்கூடிய புதிய பாதைகளையும் அறிமுகப்படுத்துவதாகும். அந்த வகையில், விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைவு.!

காணாமல்போன 23 கொள்கலன்கள் தொடர்பில் கண்டறிவதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் தேவை எனத் தெரிவிக்கப்படுவதைக் கடுமையாக விமர்சித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும்…

54 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவுக்கான பயணத்தடை நீக்கம்; சி.ஐ.டிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து வரும் நவம்பர் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி…

78 0 0
இலங்கை செய்திகள்

நீதிமன்றத்தில் உயிரை மாய்க்க முயன்ற சந்தேகநபர்கள்; அங்கு பெரும் பரபரப்பு.!

திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கின் சந்தேகநபர்கள் மூவர் நீதிவான் முன்னிலையிலேயே குற்றவாளிக்கூண்டில் வைத்து பிளேட்டினால் தங்களது கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பெரும்…

69 0 0