உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐக்கிய நாடுகள் உயிர்ப்பல்வகைமை மாநாட்டில் பங்கேற்கும் இலங்கை இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
93 பார்வைகள்

முல்லைத்தீவைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான அனுசன் சிவராசா, ஆர்மேனியாவின் யெரெவான் நகரில் ஒக்டோபர் 22 முதல் 29 வரை நடைபெறும் ஐக்கிய நாடுகள் உயிர்ப்பல்வகைமை ஒப்பந்தத்தின் 17ஆவது தரப்பினர் மாநாட்டில் (COP17) பங்கேற்கும் ஆங்கிலிக்கன் பிரதிநிதிக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிர்ப்பல்வகைமைப் பேணுகை, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சமூகங்களின் மீள்திறனை வலுப்படுத்துதல் மற்றும் இளைஞர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய துறைகளில் அனுசன் தொடர்ந்து பங்களித்து வருகின்றார். தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் (NCCSL) அனர்த்த அபாயக் குறைப்பு மற்றும் காலநிலை மாற்றத் தழுவல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாகவும், ஹலோ ட்ரஸ்ட் இலங்கையில் சுற்றுச்சூழல் ஆதரவு முகாமையாளராகவும் அவர் பணியாற்றி வருகின்றார்.

கண்டல் சூழலமைப்புகளைப் பாதுகாத்தல், காடுகள், ஈரநிலங்கள் மற்றும் ஆறுகளைப் பேணுதல், வீட்டுத் தோட்டங்களை ஊக்குவித்தல், சமூக அடிப்படையிலான சுற்றுச்சூழல் முயற்சிகள் மற்றும் இளைஞர்களுக்கான சுற்றுச்சூழல் கல்வி போன்ற பல்வேறு செயற்பாடுகளில் அவர் ஈடுபட்டு வருகின்றார். வடக்கு மாகாணம் உட்பட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கும் சமூகங்களின் பங்கேற்பை வலுப்படுத்துவதற்கும் பங்களித்து வருகின்றார். தேசிய அளவிலான சுற்றுச்சூழல் வினாடி வினாப் போட்டிகள் உடாகவும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மேம்படுத்தி வருகின்றார்.

காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் முகாமைத்துவம் தொடர்பான முதுமாணிப் படிப்பைத் தொடர்ந்துவரும் அனுசன், சுற்றாடல் ஆய்வுகளையும் சமூகங்களின் அனுபவங்களையும் இணைத்து நீண்டகால சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றார்.

COP17 மாநாடு குறித்த தனது எதிர்பார்ப்பைப் பகிர்ந்துகொண்ட அனுசன் சிவராசா தெரிவிக்கையில்:

“COP17 மாநாடு என்பது உயிர்ப்பல்வகைமைப் பாதுகாப்பிற்கான உலகளாவிய நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும், சர்வதேச உறுதிமொழிகள் சமூக மட்டத்தில் அர்த்தமுள்ள செயற்பாடுகளாக மாறுவதை உறுதிப்படுத்துவதற்குமான முக்கியமான வாய்ப்பாகும்.

இலங்கையில் கண்டல் சூழலமைப்புகள், களப்புகள், ஈரநிலங்கள் மற்றும் காடுகள் ஆகியவை உயிர்ப்பல்வகைமைக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்வதற்கான சமூகங்களின் மீள்திறனுக்கும் முக்கியமானவை.

நாடுகள் வெறுமனே உறுதிமொழிகளை வழங்குவதைக் கடந்து, நீண்டகால சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகங்களின் தலைமையிலான முயற்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். மேலும், உயிர்ப்பல்வகைமை தொடர்பான தீர்மானங்களில் இளைஞர்களினதும் உள்ளூர் சமூகங்களினதும் குரல்கள் உரிய முக்கியத்துவத்தைப் பெறுவதுடன், இயற்கையைப் பாதுகாப்பதில் விசுவாசச் சமூகங்களும் முக்கிய பங்காளிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என நம்புகிறேன்.”

இம்மாநாட்டில் பங்கேற்கும் ஆங்கிலிக்கன் பிரதிநிதிகள் கடல்சார் சூழலமைப்புகளுக்கான நீதி, அதிக ஆபத்துகளை எதிர்கொள்ளும் சமூகங்களுக்கான நியாயமான நிதியுதவி, நிலையான விவசாய முறைகள் மற்றும் பூர்வீக மக்களின் அறிவுக்கு உரிய அங்கீகாரம் ஆகிய விடயங்களை முன்னிறுத்தவுள்ளனர்.

இலங்கையின் சமூக அடிப்படையிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுபவங்களை சர்வதேச அளவிலான உரையாடல்களுடன் இணைப்பதற்கான வாய்ப்பாக அனுசன் சிவராசா இம்மாநாட்டில் பங்குகொள்கின்றார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பழைய அரசியல் கலாசாரத்துக்கு எதிராக கொழும்பில் இளைஞர்கள் போராட்டம்!

நாட்டின் பழைய அரசியல் கலாசாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ‘நியூ விங்ஸ்’ அமைப்பு மற்றும் பல்வேறு இளைஞர் அமைப்புகள் இணைந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று…

54 0 0
இலங்கை செய்திகள்

மின் உற்பத்திச் செலவு குறைந்துள்ள போதும் கட்டண உயர்வும் மின் தடையும் தொடர்வது ஏன்? : சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

மின் உற்பத்திச் செலவு குறைந்துள்ள போதிலும் மற்றும் மாற்று நீர்மின் சக்தி உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், கட்டண உயர்வும் மின் தடையும் தொடர்வதற்கான காரணம் என்ன என்பது…

88 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் தொடரும் பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

கொழும்பு மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 22, 2026) தொடர்ந்து பெய்து வரும் பலத்த அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தின் சமீபத்திய…

84 0 0
இலங்கை செய்திகள்

சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புக்களை பட்டியலிட்டார் ரவிகரன் எம்.பி!

இந்த நாட்டில் சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புகளைப் பட்டியலிட்டுக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிப்போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்…

84 0 0