உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பழைய அரசியல் கலாசாரத்துக்கு எதிராக கொழும்பில் இளைஞர்கள் போராட்டம்!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
62 பார்வைகள்

நாட்டின் பழைய அரசியல் கலாசாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ‘நியூ விங்ஸ்’ அமைப்பு மற்றும் பல்வேறு இளைஞர் அமைப்புகள் இணைந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று புதன்கிழமை அமைதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தன.

“வெள்ளையில் உடை அணிந்து, கறுப்பில் வருகை தருதல்” எனும் கருப்பொருளின் கீழ் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

மக்களின் பிரச்சினைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் எதிர்க்கட்சிகளின் இரட்டைத் தரநிலைகளை இதன்போது ஏற்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஊழல், இனவாதம், மதத் தீவிரவாதம் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அரசியல் நோக்கங்களுக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் மற்றும் ஊழல் நிறைந்த பழைய அரசியல் கலாசாரம் மீண்டும் தலைதூக்குவது தடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இளைஞர் செயற்பாட்டாளர்கள் வீதி நாடகமொன்றை அரங்கேற்றியமையுடன், சுலோக அட்டைகளையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இணுவில் சந்தியில் கோர விபத்து : முதியவர் ப@லி!

இன்றையதினம் இணுவில் சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். இதன்போது வன்னியசிங்கம் வீதி, தாவடி வடக்கினை சேர்ந்த கணேசன் பழனிலிங்கம் (வயது 67)…

81 0 0
இலங்கை செய்திகள்

வலிகாமம் கல்வி வலய சிறுவர் நாடகப் போட்டியில் வெற்றி பெற்றது குட்டியப்புலம் அ.த.க பாடசாலை

வருடாந்தம் வலிகாமம் கல்வி வலயத்தால் நடாத்தப்படும் சிறுவர் நாடகப் போட்டியில் முதலாம் இடத்தை குட்டியப்புலம் அ.த.க பாடசாலை பெற்றது. இரண்டாம் இடத்தை வட்டு இந்துக் கல்லூரியும், மூன்றாம்…

79 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கான மக்கள் ஆணையை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம்! : தேரர்கள் தலைமையில் மாபெரும் பேரணி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ‘ஜனவரம புரவசியோ’ (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் தங்காலையில்…

84 0 0
இலங்கை செய்திகள்

ஐக்கிய நாடுகள் உயிர்ப்பல்வகைமை மாநாட்டில் பங்கேற்கும் இலங்கை இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா!

முல்லைத்தீவைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான அனுசன் சிவராசா, ஆர்மேனியாவின் யெரெவான் நகரில் ஒக்டோபர் 22 முதல் 29 வரை நடைபெறும் ஐக்கிய நாடுகள் உயிர்ப்பல்வகைமை ஒப்பந்தத்தின்…

97 0 0