சவூதி விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்!
சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் எட்டு பேர் காயமடைந்ததாகவும் சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களின் நிலை தீவிரமாக உள்ளது என்றும், விமான நிலையத்திற்கு ஏற்பட்ட சேதம் மதிப்பிடப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தத் தாக்குதல் தொடர்பான எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் ஈரான் ஆதரவு பெற்ற ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சமீப நாட்களாக சவூதி விமான நிலையங்கள் மீது எறிபொருட்களை தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. முன்னதாக தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

