இன்றைய ராசி பலன்கள் – 22.10.2026
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கௌரவமான நாளாக இருக்கும். எந்த இடத்தில் தலை குனிந்து நின்றீர்களோ, அந்த இடத்தில் தலை நிமிர்ந்து உங்களுடைய திறமையை நிலை நாட்டுவீர்கள். உங்கள் மீது விழுந்த பழி விலகும். நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமை குறையும். குடும்பத்தோடு சேர்ந்து இருந்து, நேரத்தை செலவு செய்வீர்கள். வியாபாரத்திலும் வேலையிலும் எதிர்பார்த்த நல்லது நடக்கும். சின்னச் சின்ன சங்கடங்கள் விலகும். குடும்ப ஒற்றுமையால் மனம் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் மன நிறைவோடு உங்களுடைய பணிகளை செய்து முடிப்பீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் கையை விட்டுப் போன வாய்ப்புகளை எல்லாம் மீண்டும் பிடிப்பதற்கு முயற்சி செய்வீர்கள். இறை அருளால் நல்லதே நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் உயரக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையில் சுறுசுறுப்பு வெளிப்படும். உயர் அதிகாரிகளுடைய ஆதரவோடு உங்களுடைய வேலைகளை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். மனநிறைவு இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை மீண்டும் சந்தித்து பேசி மகிழ்வீர்கள். மனநிறைவு இருக்கும். கடன் சுமை குறையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் கொஞ்சம் மந்தமான சூழ்நிலை இருந்தாலும், பெருசாக நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் பிரச்சினைகள் வரக்கூடிய நாளாக இருக்கும். சக ஊழியர்களிடம் பேசி பழகும் போது கவனம் தேவை. உறவுகளோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்க கூடாது. வியாபாரத்தில் முதலீடு செய்யும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. கடன் கொடுக்க வேண்டாம். கடன் வாங்க வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று இரக்ககுணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தேவையில்லாத டென்ஷனில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட தூர பயணங்களால் மன அமைதி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். வங்கிக் கடன் முயற்சி செய்யலாம் நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனது கொஞ்சம் சோர்வாக இருக்கும். சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியாது. பல விதமான சிந்தனைகள் உங்களுடைய நேரத்தை வீணடிக்கும். ஜாக்கிரதையாக இருந்தது கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள் புது முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உத்வேகத்தோடு செயல்படுவீர்கள். உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். கல்வியில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு சிந்தித்து செயல்பட வேண்டும். முக்கியமான பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். திருட்டு போவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு கவனத்தோடு செய்ய வேண்டும். மறதியால் பிரச்சினைகள் வரலாம் மனதை ஒருநிலைப்படுத்துங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி தரும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு, மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். இடம் மாற்றம் சந்தோஷத்தை கொடுக்கும். வியாபாரத்தில் நிதானம் தேவை. இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். பெருமையாக தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். நீண்ட நாள் கனவு நிறைவேற கூடிய நாள் நெருங்கி வந்துவிட்டது. கவலைகள் விலகும் நாள் நெருங்கி வந்துவிட்டது. சுப செலவுகள் ஏற்படும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

