கிளிநொச்சியில் 15 பேருக்கு வீட்டுத்திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைப்பு.!
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் வாழ்வுக்கு பலம் திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் 15 பேருக்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டத்திற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 11 பேருக்கும், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 04 பேருக்கும் காசோலைகள் வழங்கப்பட்டது. சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் அல்லது காப்பகங்களில் இருந்து விடைபெற்று 18 வயது பூர்த்தியடைந்து சமூகத்துடன் இணையும் இளைஞர், யுவதிகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் குறித்த திட்டத்தின் மூலம் நாடுபூராகவும் உள்வாங்கப்படுகின்றனர்.
நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் H.சத்தியஜீவிதா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காசோலையை வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வில் க்ளீன் ஸ்ரீலங்கா மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் இணைப்பாளர் தேவநாயகம் சுஜீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






