உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்

93 பார்வைகள்

ஜப்பானில் நடைபெற்று வரும் 5 ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான T47 200 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் இலங்கையின் தனஞ்சனா விக்ரமசிங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

அவர் பந்தய தூரத்தை 25.80 வினாடிகளில் நிறைவு செய்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.

இதன் மூலம், இப்போட்டிகளில் இலங்கையின் பதக்கப் பட்டியலில் மேலும் ஒரு பதக்கம் சேர்க்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆண்களுக்கான நீளம் பாய்தல் T47 பிரிவில் இலங்கையின் மொஹமட் சஃப்ரான் வெண்கலப் பதக்கத்தை வென்றமையும் குறிப்பிடத்தக்கது.

நடைபெற்று வரும் 5 ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான நீளம் பாய்தல் T47 பிரிவில் இலங்கையின் மொஹமட் சஃப்ரான் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இறுதி முயற்சியில் 6.55 மீற்றர் தூரம் பாய்ந்து மூன்றாவது இடத்தைப் பிடித்த சஃப்ரான், இலங்கைக்காகப் பதக்கத்தை உறுதிப்படுத்தினார்.

இதே போட்டியில் பங்கேற்ற இலங்கையின் மற்றுமொரு வீரரான யூசுப் சல்மான், இறுதி முயற்சிக்கு முன்னர் 6.40 மீற்றர் தூரம் பாய்ந்து மூன்றாவது இடத்தில் இருந்தார்.

எனினும், இறுதி முயற்சியில் அவரால் 6.28 மீற்றர் தூரம் மட்டுமே பாய முடிந்ததால், பதக்க வாய்ப்பை இழந்து நான்காவது இடத்தைப் பெற்றார்.

இந்தப் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் 7.11 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், உஸ்பெகிஸ்தானின் ஒமத்பெக் கசானோவ் 6.99 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இறுதி முயற்சியில் சஃப்ரான் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் இலங்கைக்குப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்ததுடன், ஆசிய பாரா தடகளப் போட்டிகளில் இலங்கை வீரர்களின் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளது.

யூசுப் சல்மான் பதக்கத்தைத் தவறவிட்ட போதிலும், இரு இலங்கை வீரர்களும் பதக்கத்திற்காக இறுதிவரை போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை துரத்தும் ஜோ ரூட்?

ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் 8,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு இங்கிலாந்து அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட்டுக்கு (Joe Root) இன்னும் 64…

84 0 0
விளையாட்டுச் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி…

77 0 0
விளையாட்டுச் செய்திகள்

ரோஹித், கோலி தெரிவு குறித்து BCCIயின் தலைவர் மிதுன் மன்ஹாஸ் விளக்கம்!

2027 உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய அணி தெரிவு குறித்து இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) தலைவர் மிதுன் மன்ஹாஸ் முக்கிய விளக்கமளித்துள்ளார். “ரோஹித் ஷர்மா…

74 0 0
விளையாட்டுச் செய்திகள்

ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடையை போர்த்துக்கல் கால்பந்து கூட்டமைப்பு (FPF) விதித்துள்ளது. அணியில் தனது பங்கு குறித்து பயிற்சியாளர் ஜேழர்ஜ் ஜீசஸுடன் ஏற்பட்ட கருத்து…

84 0 0