உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
20 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

உலக செய்திகள் 14 மணி நேரம் முன்
90 பார்வைகள்

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து ஒஸ்ட்ரியத் தலைநகர் வியன்னா நோக்கிப் பயணித்த ஒஸ்ட்ரியன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த விமானம் பல்கேரியத் தலைநகர் சோஃபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

பல்கேரிய போக்குவரத்து அமைச்சை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வௌியிட்டுள்ளன.

மொத்தம் 51 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என 57 பேருடன் பயணித்த எயார்பஸ் ஏ320 ரக விமானம், டெல் அவிவிலிருந்து மாலை 6:40 க்கு வியன்னா நோக்கிப் புறப்பட்டது.

ரோமேனிய எல்லையை ஒட்டிய வான்பரப்பில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, வெடிகுண்டு அபாயம் குறித்தான எச்சரிக்கை சமிக்ஞை விமானக் குழுவினருக்குக் கிடைத்ததை அடுத்து, உடனடியாக விமானத்தை சோஃபியாவுக்குத் திருப்ப முடிவெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பல்கேரிய விமானப் படையின் போர் விமானம் ஒன்று அந்தப் பயணிகள் விமானத்தைப் பாதுகாப்பாக சோஃபியா விமான நிலையத்தில் தரையிறங்கும் வரை வழிநடத்திச் சென்றது.

இரவு 9:25 அளவில் விமானம் சோஃபியாவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதும், அதிலிருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகுவுக்கு முழு ஆதரவு: ட்ரம்ப் அறிவிப்பு!

இஸ்ரேலில் எதிர்வரும் ஒக்டோபர் 27 அன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் வெற்றி பெற எனது முழு ஆதரவும் உண்டு என…

77 0 0
உலக செய்திகள்

பங்களாதேஷ் நாட்டவர் இருவருக்கு சவூதியில் ம@ரண தண்டனை நிறைவேற்றம்!

சவூதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் புனிதத்தன்மையை மீறித் தவறான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, பங்களாதேஷை சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு…

76 0 0
உலக செய்திகள்

பிரான்ஸில் நாடு முழுவதும் வன்முறை! : 1,200 பேர் கைது!!

பிரான்ஸில் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் வாழ்க்கைச் சுமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்ததை அடுத்து, நாடு முழுவதும் வெடித்த வன்முறைகளில் குறைந்தது 1,200 பேர் கைது…

81 0 0
உலக செய்திகள்

ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுவாயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தை: ட்ரம்ப் தகவல்!

அதிக அளவிலான அணுஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணுஆயுதக் குறைத்தல் அல்லது முழுமையாக அகற்றுதல் (Denuclearization) தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி…

98 0 0