‘அன்பில் அவன்’ படத்தில் நடித்தது வரம் : ப்ரீத்தி முகுந்தன் நெகிழ்ச்சி
அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெற்றி விழா நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய நடிகை ப்ரீத்தி முகுந்தன், “படம் பார்த்துவிட்டுப் பெண்களும், இளம் பெண்களும் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
படத்தைப் முதன்முதலில் திரையரங்கில் பார்த்தபோது பதற்றத்தில் ஒன்றரை மணி நேரம் நின்றுகொண்டே பார்த்தேன்; அப்போது என் கண்களில் கண்ணீர் வந்தது. ஒரு நடிகையாக இப்படிப்பட்ட படத்தில் நடித்தது வரம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், இந்தப் படத்திற்கு ஆதரவளித்த பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.