உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைவியாக ஸ்மிருதி மந்தனா நியமனம்

விளையாட்டுச் செய்திகள் 20 மணி நேரம் முன்
67 பார்வைகள்

ஸ்மிருதி மந்தனா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹர்மன்ப்ரீத் கவுர் அனைத்து வடிவங்களிலும் தலைமை பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) மந்தனாவை அணியின் புதிய தலைமையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்மிருதி மந்தனா, 2013ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

அவர் பல ஆண்டுகளாக இந்திய அணியின் துணைத் தலைவியாக செயல்பட்டு வந்துள்ளார்.

இதற்கு முன்பு இந்திய அணியை 18 T20I போட்டிகளிலும் 4 ODI போட்டிகளிலும் தலைவியாக வழிநடத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டிலும் அவரது தலைமைத்துவ திறமை வெளிப்பட்டுள்ளது.

குறிப்பாக, Royal Challengers Bengaluru (RCB) அணியை 2024 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் Women’s Premier League (WPL) செம்பியன் பட்டத்திற்கு வழிநடத்தியுள்ளார்.

இந்த நிலையில், இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு தனக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய கெளரவம் என மந்தனா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்காக விளையாடுவது எப்போதும் தனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்ததாகவும், தற்போது அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்திருப்பதை பெருமையாகக் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ஹர்மன்ப்ரீத் கவுர் அணித்தலைவியாக அணிக்கு வழங்கிய பங்களிப்பையும் மந்தனா பாராட்டியுள்ளார். அணியின் பயணத்தில் ஹர்மன்ப்ரீத் முக்கிய பங்காற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

கண்ணீருடன் சர்வதேச கால்பந்தில் இருந்து விடை பெற்றார் மெஸ்ஸி

ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லயனல் மெஸ்ஸி, கண்ணீருடன் சர்வதேச கால்பந்தில் இருந்து விடைபெற்றார். பெனின் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியே ஆர்ஜென்டினா அணிக்காக அவர்…

65 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஐசிசியின் செப்டம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கு சமரி அத்தபத்து பரிந்துரை!

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) வெளியிட்டுள்ள செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கடந்த…

50 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஈட்டி எறிதலில் எனக்கு இவர்தான் குரு : ருமேஷ் பத்திரகே நெகிழ்ச்சி!

ஈட்டி எறிதல் விளையாட்டில் உலகின் முதன்மை நிலை வீரரான இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே , ஜெர்மனியின் ஒலிம்பிக் சாம்பியனான தோமஸ் ரோலரை (ஈட்டி எறிதலில் எனக்கு…

86 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கைக்கு எதிரான முத்தரப்பு கிரிக்கட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் ஒருநாள் முத்தரப்புத் தொடருக்கான பாகிஸ்தான் ஆடவர் அணிகளை…

73 0 0