உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இளம் குடும்பப் பெண் கொ**லை; தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
72 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் தடயவியல் பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம், நல்லூர் கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து சமையல் கலைஞரான ஒரு பிள்ளையின் தாயாரைக் கத்தியால் வெட்டி படுகொலை செய்துவிட்டு, தாயாரையும் காயப்படுத்திவிட்டுத் தப்பியோடிய இளைஞன் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சமையல் கலைஞரான ஆன் லக்ஷா இக்னேஷியஸ் (வயது 32) என்ற ஒரு பிள்ளையின் தாயாரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரைக் கொலை செய்த பின்னர் ரயில் முன்பாய்ந்து உயிரை மாய்த்தவர் கிளிநொச்சி, பரந்தன் சிவபுரம் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் புகழரசன் (வயது 23) என்ற இளைஞராவார்.

நேற்று திங்கட்கிழமை இரவு நல்லூர் கோவில் வீதியில் உள்ள மேற்படி பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞன், அங்கிருந்த ஆன் லக்ஷா இக்னேஷியஸ் மீது சரமாரியாகக் கத்தித் தாக்குதல் நடத்தியுள்ளமையுடன் அவரது தலைமுடிகளையும் கத்தியால் அறுத்துக் கொடூரமான முறையில் தாக்குதலை நடத்தியுள்ளார். இதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தாக்குதலைத் தடுக்க முயன்ற அந்தப் பெண்ணின் தாயார் மீதும் அந்த இளைஞர் கத்தித் தாக்குதல் நடத்தியுள்ளார். படுகாயமடைந்த தாயார் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலைத் தொடர்ந்து கத்தியுடன் அங்கிருந்து தப்பிய அந்த இளைஞன், அரியாலைப் பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவுத் தபால் ரயில் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

உயிரிழந்த பெண் சமையல் கலைஞராக வேலை செய்யும் யாழிலுள்ள பிரபல நட்சத்திர விடுதியில், மேற்படி இளைஞரும் சமையல் கலைஞர் படிப்பை நிறைவு செய்து பயிற்சி சமையல் கலைஞராக வேலை செய்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்களுக்கிடையில் காதல் விவகாரம் இருந்திருக்கலாம் என்றும், அதன் அடிப்படையில் இந்தக் கொலை நடைபெற்றிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவன் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது உயிரை மாய்த்துள்ள நிலையில், அந்தப் பெண் மறுமணம் செய்யாமல் தனது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் இடம்பெற்ற வீட்டில் தடயவியல் பொலிஸார் தீவிர சோதனைகளை முன்னெடுத்துள்ளமையுடன், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மீளமைக்குமாறு கோரிக்கை.!

மத்திய மாகாண கண்டி மாவட்டத்தில் உள்ள ஹோப் தோட்ட வைத்தியசாலை, JEDB – ஹேவாஹெட்டையில் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை மீளமைக்குமாறு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து…

48 0 0
இலங்கை செய்திகள்

கண்டாவளை கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மூன்றிற்கு நிதியுதவி!

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நாடாளுமன்ற உறுப்பினர் கருனைநாதன்  இளங்குமரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கண்டாவளை கோட்ட பாடசாலைகள் மூன்றிற்கு பதினைந்து இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா நிதியில்…

39 0 0
இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள் – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம்.!

தேசிய சிறுபான்மை இனம் என்ற வகையில் மலையகத் தமிழர்களை அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையகத் தமிழ் மக்களை தேசிய நீரோட்டத்தில் அரவணைத்துச்…

64 0 0
இலங்கை செய்திகள்

நாட்டில் போதிய அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது! : பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை!!

இலங்கையில் போதியளவு எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (06)…

76 0 0