உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போ*தைப்பொருள் பாவனையாளர்கள்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
76 பார்வைகள்

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் – சகாயபுரம் (J/150) எனும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற குழுவினர் போதைப்பொருளை பாவித்துவிட்டு சமூகத்திற்கு ஒவ்வாத செயல்களை செய்வதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை மாணவர்கள் தமது கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளனர்.

மோட்டார் சைக்கிள்களை ஆபத்தான முறையில் செலுத்துதல், கூச்சலிடுதல், வீதியில் செல்பவர்களை வழிமறித்தல், போக்குவரத்துக்கு இடையூறாக செயற்படல், அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து இளவாலை பொலிஸாருக்கு தெரியப்படுத்தினாலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட தரப்பினரை சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

60 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாடுகளை திருடியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

எருமை மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சம்மாந்துறை…

69 0 0
இலங்கை செய்திகள்

மரணப் பொறியிலிருந்து மக்களை மீட்டெடுங்கள்.!

“இந்த அரசு மக்கள் மீது வரிக்கு மேல் வரிகளை விதித்து, வற் வரியை அதிகரித்து, அரச வருமானத்தை அதிகரித்துள்ளது. மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து…

58 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

64 0 0