உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

இலங்கை செய்திகள் 14 மணி நேரம் முன்
77 பார்வைகள்

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

கலாபூஷணம், ஆய்வார்வலர் நா.நவநாயகமூர்த்தி எழுதிய “பண்டைய இந்த வரலாற்று ஆய்வு நூலின் வெளியீட்டு நிகழ்வு வீரமுனை சுவிஸ் கிராண்ட் மஹாலில் நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் புத்தகம் வைக்கப்பட்டு விசேட பூஜை நடாத்தப்பட்டதை தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமானது.

விழாக்குழுவின் தலைவரும், ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் செயலாளருமான அ.பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், லகுகல பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் நவநீதன், போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் கமல்ராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்னம் உட்பட பலர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

வீரமுனையின் பண்டைய வரலாறு மற்றும் அப்பகுதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலம் தொடர்பான வரலாறு, பண்பாட்டு மற்றும் ஆய்வுத் தகவல்களை உள்ளடக்கிய நூலாகவும் வீரமுனையின் நீண்ட வரலாற்றினை மிக ஆழமாக ஆய்வு செய்து இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை, தலைமையுரை, நூல் வெளியீட்டுரை அறிமுக உரை, நூல் வெளியீடு, நூல் நயவுரை, ஏற்புரை உள்ளிட்டவை நடைபெற்றன.

இந்த நிகழ்வில் நூலாசிரியர் சுகயீனம் காரணமாக வரமுடியாத நிலையில் அவரது பாரியார் வீரமுனை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது வீரமுனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்று தேசிய பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

இந்நூல் வெளியீட்டு விழாவில் வரலாற்று ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சமய மற்றும் அரசியல்வாதிகள் சமூக ஆர்வலர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

81 0 0
அம்பாறை செய்திகள்

இரண்டு பிள்ளைகளின் தாய் உ**யிரிழப்பு.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04 பகுதியில் 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட…

150 0 0