கல்கிஸையில் லொறி மோதி சைக்கிள் ஓட்டுநர் உயி**ப்பு
கொழும்பு, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொளுமடம – பொருபன வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 67 வயதுடைய முதியவர் ஒருவர் உ**ழந்துள்ளார்.
பொருபன இரும்புப் பாலத்துக்கு அருகில் நேற்று (2) வெள்ளிக்கிழமை பொருபன நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உ**ழந்துள்ளார்.
உ**ழந்தவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.