தென்மராட்சி பிரதேச பண்பாட்டுப் பேரவை இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா.!
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா, கொடிகாமம் நட்சத்திர மஹாலில் நேற்று (02) சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்விற்கு முன்னதாக, சாவகச்சேரி நுணாவிலிலிருந்து நிகழ்விடம் வரை தமிழர் கலாச்சாரங்களை பறைசாற்றும் மரபு சார் நிகழ்வுகள் ஊர்தி பவனியை அலங்கரித்தன.
அமரர் கலாபூசணம் வேலாயுதர் விநாசித்தம்பி அரங்காக நிகழ்வரங்கு அமைந்தது.
நிகழ்வில் கலைச்சாகரம் மற்றும் இளங்கலைஞர் விருதுகள் வழங்கி கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி தலைமையில் இடம்பெற்ற
நிகழ்வில், யாழ்.மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண உள்ளக கணக்காய்வாளர் முருகேசு சிவகுமாரி, சாவகச்சேரி பிரதேச வைத்திய அதிகாரி பசுபதி அச்சுதன், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் மாலினி கிருஸ்ணானந்தன், நட்சத்திரமஹால் உரிமையாளர் தம்பிராசா பரமானந்தம், சிற்பக்கலை கலைஞர் கலாபூசணம் கிரிஸ்ணபிள்ளை கலாமோகன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பல பாரம்பரிய கலை நிகழ்வுகள் நிகழ்வை அலங்கரித்தன.









