டிக்கோயா இரட்டைக் கொ**யுடன் தொடர்புடைய நபர் யாழில் கைது!
நுவரெலியாவில் நான்கு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இரட்டைக் கொ**ச் சம்பவத்துடன் தொடர்புடைய 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியாவில் இரட்டைக் கொ**யை மேற்கொண்ட பின்னர் குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.