உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அனோஜன் விடுதலைக்கு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
89 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமாஞ்ஞ மற்றும் அமரபுர பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

அதற்கமைய, இலங்கை ராமாஞ்ஞ பீடத்தின் மகாநாயக்க அக்கமகா பண்டித அதிவணக்கத்திற்குரிய மகுலேவே விமல நாயக்க தேரர் மற்றும் அமரபுர பீடத்தின்மகாநாயக்க கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி மகா நாயக்க தேரர் ஆகியோரினால் அனுப்பப்பட்டுள்ள குறித்த மகஜர், தென்னிலங்கை பிரதான சங்கநாயக்க கலாநிதி வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரரினால் கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே விடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இதுதவிர, இந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்து குருமார் சங்கத்தின் தலைவரும், அகில இலங்கை இந்து கலாசார சபையின் தலைவருமான கலாநிதி சிவாஸ்ரீ கே.வி.கே. வைதீஸ்வர குருக்களினாலும் அண்மையில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

வணக்கத்திற்குரிய பாகொட சந்தவங்சி தேரர், வணக்கத்திற்குரிய வேபடைர தம்மசிறி தேரர், இந்து குருமார் சங்கத்தின் உறுப்பினர் சிவாஸ்ரீ குகதாச குருக்கள் , சட்டத்தரணி தனுஜா நவரத்ன மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஆர்.ஏ. அமில சஞ்சீவ உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

82 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0