பெல்மடுல்ல அனர்த்தம்: 14 குடும்பங்களுக்கு தற்காலிக குடியிருப்பு
பெல்மடுல்ல, லெல்லுபிட்டிய தோட்டம், பெரண்டுவ பகுதியில் 30 அறைகளைக் கொண்ட லயன் குடியிருப்பின் மீது பாரிய அரச மரக்கிளை முறிந்து விழுந்ததில், ஆறு லயன் அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி நேரில் சந்தித்து, அவர்களின் நிலைமைகளை கேட்டறிந்தார்.
இதன்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, நேற்று (1) இரத்தினபுரி மாவட்ட செயலாளர் எம்.ஜி. லலித் ஆனந்த மற்றும் அமைச்சர் வசந்த சேரசிங்க ஆகியோருடன் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களையும் தற்காலிகமாக தங்க வைப்பதற்கான மாற்று இடம் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதற்கமைய, ‘தித்வா’ திட்டத்தின் மூலம் பெறப்பட்ட கூடாரங்களை 14 குடும்பங்களுக்கும் வழங்கி, அவர்களை தற்காலிகமாக அங்கு குடியமர்த்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.